தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரியின் ஏற்பாட்டில் 'வாசிக்கும் சமூகத்தை உருவாக்க சிறுவர்களிடமிருந்து ஆரம்பிப்போம்' எனும் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு நேற்று (27) கல்வியியற் கல்லூரியின் கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி தலைவரும், நூலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளருமான ஏ.ஜீ. அஹமட் நழீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை வழங்கி வைத்தார்.

தேசிய வாசிப்பு ஒக்டோபர் மாதத்தினை முன்னிட்டு அட்டாளைச்சேனையிலுள்ள பாடசாலை மாணவர்கள் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு இந்நிகழ்வில் பரிசளித்து பாரட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரியின் உப பீடாதிபதிகளான எம்.பீ.ஏ.அஸீஸ், எம்.ஏ.கலீல், எம்.ஐ.ஜஃபர், நிதி நிருவாக இணைப்பாளர் எஸ்.என்.ஏ.அரூஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் ரீ.கணேசரத்தினம் உட்பட விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)

Fri, 11/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை