கொழும்பு ஆனந்தா கல்லூரி மாணவன் செனுர த சில்வா தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பு

கொழும்பு ஆனந்தா கல்லூரியின் மாணவன் பீ.டி.செனுர த சில்வா தெற்காசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் ஒன்பது வெளிநாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டிருந்தாலும் தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

14 வயதுடைய 9ம் வகுப்பில் கல்வி கற்கும் செனுர, குறைந்த வயதில் தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆண்கள் மேசைப் பந்து போட்டியில் கலந்து கொள்ளும் முதலாவது விளையாட்டு வீரர் என்பதோடு, ஆனந்தா கல்லூரியின் குறைந்த வயதில் தெற்காசிய விளையாட்டு விழாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளும் முதலாவது விளையாட்டு வீரருமாவார்.

தற்போதைய மேசை பந்து தரவரிசைப் படுத்தலுக்கு அமைய 15 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் முதலாமிடத்தையும், 18 வயதின் கீழ் முதலாமிடத்தையும், ஆண்கள் போட்டிகளில் ஆறாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

செனுரவின் பாடசாலை பயிற்சியாளராக நிசான் பெரேரா செயற்படுவதோடு, இதுவரையில் அவரது பயணத்தில் அவருக்கு உதவிகளைச் செய்த அனைவருக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

(புத்தளம் விசேட நிருபர்)

Thu, 11/28/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக