காத்தான்குடி பள்ளிவாசலால் மாணவர்கள் கௌரவிப்பு

காத்தான்குடி முதலாம் குறிச்சி பெரிய மீரா ஜும்ஆப்பள்ளிவாசல் பகுதியில் இவ்வாண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியடையந்த மாணவர்கள் நேற்றுமுன்தினம் (24) கௌரவிக்கப்பட்டனர்.

வருடாந்தம் இடம் பெற்று வரும் ஷஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் வாசிப்பு நிகழ்வின் 64வது வருடமாகவும் கடந்த ஒரு மாத காலம் இந்த ஹதீஸ் வாசிப்பு நிகழ்வு இடம் பெற்ற இறுதி நாள் நிகழ்வில் பள்ளிவாசல் நிருவாகிகளினால் இந்த மாணவர் கௌரவிப்பு வைபவம் நடைபெற்றது.

பெரிய மீரா ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவர் மௌலவி எம்.ஐ.எம்.ஆதம்லெவ்வை தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.எஸ்.எம்.ஹாறூன் ,காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ​ ​ெடாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர், காத்தான்குடி மத்தியஸ்த சபை தவிசாளர் எம்.ஐ.எம்.உசனார், பள்ளிவாசலின் உப தலைவர் எம்.எம்.ஜௌபர் உட்பட உலமாக்கள் பள்ளிவாசல் நிருவாகிகள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த வைபவத்தில் இவ்வாண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியடையந்த 10 மாணவர்களும், இப் பகுதியைச் சேர்ந்த மாணவியொருவர் மௌலவியாப் பட்டத்தையும் பெற்றமைக்காக 11 மாணவர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

Tue, 11/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை