வெனிஸ் நகரில் மூன்றாவது முறையாக வெள்ளப்பெருக்கு

இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரில் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

வரலாறு காணாத அளவில் அடுத்தடுத்து கடல் நீர் வெள்ளமென உட்புகுவதால் அவசரநிலை பிரகடனம் தொடர்கிறது. தண்ணீரில் மிதக்கும் சொர்க்கம் என்றழைக்கப்படும் வெனிஸ் நகருக்குள், கடலில் அலைகள் உயரும்போது குதிகால் அளவிற்கு நீர் பெருக்கெடுப்பது வாடிக்கையான ஒன்றாகும்.

ஆனால் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன், அதி உயரத்திற்கு கடல் அலைகள் எழுவதால் வெனிஸ் நகரின் புனித மார்க்ஸ் சதுக்கம் உள்ளிட்ட இடங்களில் 5 அடி உயரத்திற்கு கடல் நீர் உட்புகுந்துள்ளது.

யுனெஸ்கோவின் பாரம்பரிய தலங்களில் ஒன்றான வெனிஸின் 70 வீத இடங்கள் கடல்நீரால் சூழப்பட்டுள்ளன. பழமையான கட்டடங்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட புராதன கட்டடங்களை கடல்நீர் சூழ்ந்திருப்பதால் கலை பொக்கிஷங்கள் சேதமடைந்துள்ளன.

Tue, 11/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை