மருத்துவமனையில் காட்டர் அனுமதி

மூளையில் அழுத்தத்தை போக்குவதற்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் அட்லா ண்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மைய கீழே விழுந்ததால் ஏற்பட்ட இரத்தப் போக்கில் இருந்து இந்த அழுத்தம் ஏற்பட்டதாக காட்டர் மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

“காட்டர் வசதியாக ஓய்வு எடுத்து வருவதோடு அவரது மனைவி ரொசலின் அவருடன் உள்ளார்” என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

95 வயதான காட்டர் அமெரிக்காவில் உயிர்வாழும் மிக வயது முதிர்ந்த தலைவராக உள்ளார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அவர் 1977 தொடக்கம் 1981 வரை ஒரு தவணைக்கு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்துள்ளார். தனது இரண்டாவது தவணைக்கான போட்டியில் அவர் ரொனால்ட் ரீகனிடம் தோற்றார்.

ஜனாதிபதி பதவிக்குப் பின்னரும் மனிதாபிமான செயற்பாடுகளில் ஈடுபட்ட அவருக்கு 2002 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது.

ஜோர்ஜியாவில் உள்ள தனது வீட்டில் கீழே விழுந்த காட்டருக்கு கடந்த மே மாதம் இடுப்புப் பகுதியில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.

Wed, 11/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை