அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராய விசேட ஆணைக்குழு

6 வாரத்தினுள் ஜனாதிபதி நியமிப்பார்

அரசியல் பழிவாங்களுக்கு இலக்கான அரச ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விசேட ஆணைக்குழுவொன்றை நியமிக்க இருப்பதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார். இதனூடாக அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து ஆராயப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் முதலாவது

ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கூறுகையில்,

அரச அதிகாரிகள் எடுத்த முடிவுகள் தொடர்பில் அவர்களுக்கு சிறை செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அவர்களை பாதுகாக்கும் வகையில் விசேட சட்டம் கொண்டுவருவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் இடம்பெற்ற பல்வேறு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் எதிர்வரும் 6 வார காலத்தினுள் இந்த ஆணைக்குழு நியமிக்கப்படும் .

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி மக்களுக்கு உத்தரவாதம் அளித்திருந்தார். அதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார். அடுத்து பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் வரிச்சலுகைகளை அவர் அறிவித்துள்ளார். சகல மக்களையும் தன்னுடன் கைகோர்க்குமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

Thu, 11/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை