தம்பி அடித்த பந்து அண்ணணின் தலையை பதம் பார்த்தது

அவுஸ்திரேலிய மார்ஷ் கிண்ணம்:

அவுஸ்திரேலியாவில் மார்ஷ் கிண்ணத்துக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது வெஸ் அகர் அடித்த பந்து தாக்கியதில் ஆஷ்டன் அகருக்கு இரத்தம் கொட்டியது.

அவுஸ்திரேலியாவில் மார்ஷ் கிண்ணத்துக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்ட்டில் நேற்றுமுன்தினம் நடந்த ஆட்டம் ஒன்றில் மேற்கு அவுஸ்திரேலியா- தெற்கு அவுஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் தெற்கு அவுஸ்திரேலியா துடுப்பாட்டத்தில் செய்து கொண்டிருந்த போது அந்த அணியின் வெஸ் அகர் அடித்த ஒரு பந்து, ‘மிட்ஆன்’ திசையில் பிடியெடுக்க முயற்சித்த அவரது சகோதரரான ஆஷ்டன் அகரை (மேற்கு அவுஸ்திரேலியா) பதம் பார்த்தது. அதாவது சில அடி ஓடி வந்து அவர் தடுமாற, பந்து நேராக அவரது நெற்றியில் பலமாக தாக்கி இரத்தம் கொட்டியது. உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பிறகு அவரது தம்பி வெஸ் அகர் (9 ஓட்டடங்கள்) கொஞ்சம் பதற்றத்துடனே பேட்டிங் செய்ததை காண முடிந்தது. இந்த ஆட்டத்தில் தெற்கு அவுஸ்திரேலியா 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

26 வயது இடக்கை சுழற்பந்து வீச்சாளரான ஆஷ்டன் அகர் அவுஸ்திரேலிய அணிக்காக 4 டெஸ்ட், 9 ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் 21 ஆட்டங்களில் ஆடியிருக்கிறார்.

Tue, 11/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை