அரச துறை போன்று தனியார் துறைக்கும் சம்பள அதிகரிப்பு

அரசாங்கத்துறையினருக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் அதே காலகட்டத்தில் தனியார் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பு வழங்க எமது ஆட்சியில் நடவடிக்கை எடுப்போமென எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபஷ தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரியில் (7) நடைபெற்ற விசேட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெற்றிலை விற்கும் நபர் முதல் அனைத்து மக்களதும் பொருளாதாரத்தை தரமுயர்த்தும் வேலைத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இதேவேளை வேட்பாளர் கோட்டாபய வழங்கியுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படுவது உறுதியென்றும் அவர் குறிப்பிட்டார். 

புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித்  பிரேமதாச தோட்டத் தொழிலாளிகளுக்கு 1,500 ரூபா நாட்கூலி பெற்றுத் தருவதாக மேடையில் கூறியுள்ளபோதும் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் 1,000 ரூபாவே தரப்படுமென அச்சிடப்பட்டுள்ளது. இது ஏமாற்று வேலை. இக்காலத்து மக்கள் இவ்வாறான பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாறமாட்டார்களென்றும் அவர் தெரிவித்தார்.

Sat, 11/09/2019 - 09:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை