லெவன்டேவிடம் தோற்ற பார்சிலோனா பின்னடைவு

ஏழு நிமிட இடைவெளிக்குள் லெவன்டே அணிக்கு மூன்று கோல்களை விட்டுக்கொடுத்த லா லிகாவில் முதலிடத்தில் இருந்த பார்சிலோனா அணி 3–1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்தத் தோல்வியுடன் பார்சிலோனா இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது. நெல்சன் செமேடோ மீது ஜோர்ஜ் மிரமொன் இழைத்த தவறை அடுத்து கிடைத்த பெனால்டியை கொண்டு லியொனல் மெஸ்ஸி கோல் ஒன்றை பெற்றார்.

எனினும் போட்டியில் முன்னிலை பெற்றிருந்த பார்சிலோனாவுக்கு லெவன்டே இரண்டாவது பாதியில் அதிர்ச்சி கொடுத்தது. 61 ஆவது நிதிடத்தில் ஜோஸ் கெம்பானாவின் கோல் மூலம் போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்த லெவன்டே இரண்டு நிமிடங்களில் போர்ஜா மெயோரல் மூலம் இரண்டாவது கோலை புகுத்தியதோடு அடுத்த 5 ஆவது நிமிடத்தில் மென்ஜா ரடோஜா மூன்றாவது கோலையும் பெற்றுக்கொடுத்தார்.

எனினும் மெஸ்ஸி தனித்து பெற்ற கோல் ஓன்று வீடியோ நடுவர் உதவி மூலம் நிராகரிக்கப்பட்டது பார்சிலோனாவுக்கு ஏமாற்றம் தந்தது. அப்போது அன்டோனியோ கிரீஸ்மான் ஓப் சைட் சென்றிருந்தார்.

இந்தப் பருவத்தில் பார்சிலோனா தனது 11 லீக் போட்டிகளில் பெறும் மூன்றாவது தோல்வி இதுவாகும்.

Mon, 11/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை