இராணுவ படையணி தலைமையகத்தில் புதிய ரக்பி மைதானம் திறந்துவைப்பு

இலங்கை இராணுவ யுத்த உபகரண படையணி தலைமையகத்தின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா (08) ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் தொம்பகொடயில் அமைந்துள்ள

இலங்கை இராணுவ யுத்த உபகரண படையணி தலைமையகத்திற்கு வருகை தந்து இந்த தலைமையகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ரக்பி மைதானத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதி , லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு பிரதான நுழைவாயிலில் வைத்து இந்த தலைமையகத்தின் கட்டளை தளபதியால் வரவேற்பு வழங்கப்பட்டது.

மேலும் இலங்கை இராணுவ யுத்த உபகரண படை யணி தலைமையகத்தின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் இந்திரஜித் வித்யானந்தவால் இராணுவத் தளபதி வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதிய ரக்பி மைதானம் இதன் வரலாற்றைக் பற்றியும் அனைவருக்கும் சுருக்கமாக உரையாற்றினார்.

இராணுவ ரக்பி போட்டியானது தேசிய மற்றும் இராணுவ மட்டங்களில் புதிய வெற்றிகளை எட்டியுள்ளதால், விளையாட்டில் ஆர்வமுள்ள, இலங்கை இராணுவ யுத்த உபகரண படையணி மற்றும் பிற படையினர்களை ரக்பி விளையாட்டில் சேர்ந்து கொள்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சிக்கு இராணுவ தளபதி நன்றிகளை தெரிவித்துக்கொண்டு புதிய மைதானத்தின் நினைவு படிகத்தை திறந்துவைத்தார்.

ரக்பி ரசிகர்கள் ஒரு பெரிய கூட்டத்தின் முன்னிலையில் இலங்கை இராணுவ யுத்த உபகரண படையணி மற்றும் இராணுவ ரக்பி அணிக்கும் இடையில் இடம் பெற்ற விளையாட்டு போட்டியை இராணுவத் தளபதி மற்றும் பிற அதிதிகள் சிறிது நேரம் பார்வையிட்டன. போட்டியின் முடிவில் தளபதி பங்கேற்பாளர்களுக்கும் வெற்றியாளர்களுக்கும் வெற்றி கிண்ணம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அவர் புறப்படுவதற்கு முன்னர், இராணுவத் தளபதி இலங்கை இராணுவ யுத்த உபகரண படையணி தலைமையகத்தில் உள்ள பார்வையாளர்களின் புத்தகத்தில் பாராட்டுக்களைத் கையெப்பமிட்டதுடன்,அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டார்.தொடக்க விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள்,இலங்கை இராணுவ யுத்த உபகரண படையணியின் அதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்கள், படையினர்களும் கலந்து கொண்டனர்.

Tue, 11/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை