ஐ.நாவுடன் இணைந்து கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை முன்னெடுப்பு

சிறைகளுள் போதைப்பொருள் பாவனை;

சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் குறித்தும் இதனை கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான ஐ.நா அலுவலக அதிகாரிகளுடன் நீதி மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா ஆராய்ந்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான ஐ.நா அலுவலக பணிப்பாளர் பென்ஹோல்சர் அந்த அமைப்பின் உலகளாவிய கப்பற்றுறை குற்றத் திட்ட பிரதானி எலன் கொலே உள்ளிட்ட பிரதிநிதிகள் நேற்று மனித உரிமைகள் மற்றும் நீதி

மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிரிபாலடி சில்வாவாவை நீதி அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கை சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் குறித்தும் இதனை கட்டுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. இதற்கு சர்வதேச ரீதியான அறிவு மற்றும் வழிமுறைககளை பயன்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதாக நீதி அமைச்சு தெரிவித்தது.

ஐ.நாவின் இந்த அமைப்பினூடாக இலங்கை சிறைச்சாலைகளில் காணப்படும் இந் நிலைமையை மாற்றி போதைப்பொருளற்ற சிறைச்சாலையொன்றை உருவாக்க தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளையும் ஏனைய உதவிகளையும் வழங்க தயார் என போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான ஐ.நா அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத் துறைசார் ஜ.நா அலுவலகத்துடன் நெருங்கிய தொடர்பை பேணி கைதிகளின் நலன்புரி செய்பாடுகளுக்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக இருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

சிறைச்சாலை சூழல் அதிலுள்ள வசதிகள் மற்றும் கைதிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் போதுமானதல்ல என தனது அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கைதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கை எனவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.(பா)

Fri, 11/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை