நயாகரா நீர்வீழ்ச்சியில் சிக்கிய படகு நூற்றண்டுக்கு பின் நகர்வு

நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சிக்கியிருந்த படகு நீரோட்டத்துடன் நகர்ந்துள்ளது.

1918இல் கனடாவுக்கு அருகே உள்ள அருவியின் பகுதியிலுள்ள பாறைகளுக்கு இடையே அந்தப் படகு சிக்கியது.

பிரம்மாண்ட நீர்வீழ்ச்சியான நயாகராவின் நீரோட்டத்துக்கு அசைந்துகொடுக்காமல் கிட்டத்தட்ட 101 ஆண்டுகள் படகு சிக்கியிருந்தது. கடந்த வாரம் பலத்த காற்று, கடும் மழை ஆகியவற்றால் பாறைகளுக்கு இடையிலிருந்து அது நகர்ந்தது.

1918இல் ஒரு கப்பலிலிருந்து இந்தப் படகு துண்டிக்கப்பட்டுள்ளது. அப்போது படகில் இருவர் சிக்கியிருந்தனர். அருவியின் ஹோர்ஸ்ஷு நீர்வீழ்ச்சி பகுதிக்கு அருகே சிக்கிய படகிலிருந்து அவ்விருவரையும் மீட்க அதிகாரிகள் அரும்பாடுபட்டனர். இறுதியில் அதிகாரிகள் படகை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு கயிற்றின் உதவியால் இருவரையும் கரையேற்றினர்.

அன்றிலிருந்து இன்று வரை படகு சற்றும் அசையாமல் அங்கேயே இருந்தது. படகு தற்போது வேறு சில பாறைகளில் சிக்கியுள்ளது. அது மேலும் நகர்கின்றதா என்பதை அதிகாரிகள் கவனித்துவருகின்றனர்.

Tue, 11/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை