ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி

பிரசார நடவடிக்ைககள் 13 நள்ளிரவு நிறைவு

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

நாட்டில் உள்ள 21 மில்லியன் மக்களுக்கு தலைமைதாங்கும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் இந்த அளவு வேட்பாளர்கள் களத்தில் இருப்பது இது முதல் முறையாகும்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான கால நேரம் ஒரு மணித்தியாலத்தால் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்களிக்கலாம்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் நீளம் 2.1 அடியாக (66 செ.மீ) அளவு

 

நீளமாக இருத்தல் மற்றும் இதனால் மக்களுக்கு தமது வாக்குகளை போடுவதற்கு எடுக்கப்படும் நேரம் ஆகியவற்றை கணக்கில் எடுத்து வாக்களிப்பு நேரம் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைத்து சீல் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளும் கணக்கெடுப்பு நிலையங்களை சேர்ந்தடைந்த பின்னரே வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும். வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.

முதலாவது தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் நேரத்தை பற்றி கேட்கப்பட்டபோது பெருமளவு வேட்பாளர்கள களத்தில் இருப்பதால் உரிய நடைமுறைகளை பூர்த்தி செய்ய அதிக நேரம் தேவைப்படும், அத்துடன் அதிக வாக்குகளும் போடப்படும் என்பதால் முடிவுகளை வெளியிடும் நேரத்தை சரிவர கூறமுடியாது. முன்னைய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தெரிவிக்க எடுத்த நேரத்தை விட இம்முறை முடிவுகளை அறிவிக்க எடுத்த நேரத்தை விட இம்முறை முடிவுகளை அறிவிக்க அதிக நேரம் எடுக்கும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்னாயக்க கூறினார். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஒரு சுற்று வாக்களிப்பு தான் உள்ளது. எனினும் வாக்காளர்கள் தமது விருப்பு வாக்குகளையும் தெரிவிக்க முடியும். எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளை பெறாவிட்டால் இரு பிரதான வேட்பாளர்களில் வெற்றிபெற்றவராக மற்றைய வேட்பாளரின் விடுப்பு வாக்கை பெறுபவர் அறிவிக்கப்படுவார்.

இவ்வாறாக வாக்குகளை எண்ணும் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டால் அது மேலும் அதிக நேரத்தை எடுக்கும் என்று ரத்னாயக்க விளக்கினார்.

இதேநேரம், இம்முறை ஜனாதிபதி தேர்தலின் செலவு அதிகமாக இருப்பது பற்றி கூறப்படுவது தொடர்பான விளக்கமளித்த அவர், இம்முறை அதிக அளவிலான வேட்பாளர்கள், கடந்தமுறை இருந்ததை விட இரண்டு மடங்கு நீளமான வாக்குச்சீட்டு, இறக்குமதி செய்யப்பட்ட வாக்குப் பெட்டிகள் மற்றும் தேர்தல் கடமைகளுக்காக அதிக அளவில் அதிகாரிகள் பயன்படுத்தப்படுதல் ஆகிய விடயங்கள் தேர்தல் செல்லாது அதிகப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Mon, 11/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை