அல்குர்ஆன் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு காத்தான்குடியில் கௌரவம்

காத்தான்குடியில் மக்தப் அல்குர்ஆன் மதரசாக்களுக்களிடையில் நடாத்தப்பட்ட அல்குர்ஆன் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களைக் கௌரவிக்கும் வைபவம் கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப் பள்ளிவசலில் நடைபெற்றது.

மக்தப் மத்திய நிலையத்தின் தலைவர் வி.ரி.எம்.ஹனிபா அதிபர் தலைமையில் நடைபெற்ற இக் கெளரவிப்பு வைபவத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தி பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இவ் வைபவத்தில் காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி.எம்.ஹக்கீம் மற்றும் உலமாக்கள்,முக்கியஸ்தர்கள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், மக்தப் அல்குர் ஆன் மதரசாக்களின் முஅல்லிம்கள் பள்ளிவாசல்களின் நிருவாகிகள் காத்தான்குடி

ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.றிஸ்வி முப்தியை கௌரவித்து அவருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்ததுடன், ஜம் இய்யத்துல் உலமா சபையின் உப தலைவர் உட்பட உலமாக்கள் சிலரும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். காத்தான்குடியில் மக்தப் அல்குர்ஆன் மதரசாக்களுக்களிடையில் நடாத்தப்பட்ட அல்குர்ஆன் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ் என்பவைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

Mon, 11/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை