சிறு ஏற்றுமதி பயிர் இறக்குமதி கட்டம் கட்டமாக குறைப்பு

உள்நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதியை கட்டம் கட்டமாக தடைசெய்யவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உள்நாட்டில் இவற்றின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு விசேட வரிச் சலுகைகள் வழங்க இருப்பதாக இணை அமைச்சரவை பேச்சாளர் டொக்டர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் பொருளாதாரம் பாரிய பின்னடைவை கண்டுள்ளதாக குறிப்பிட்ட அவர்

விவசாயத்துறை மற்றும் பெருந்தோட்டத்துறைகளை மேம்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்,

உள்நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய அநேக பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து தொடர்ச்சியாக இறக்குமதி செய்யப்படுகிறது. எதிர்வரும் காலத்தில் இவற்றை தடை செய்ய இருக்கிறோம். அதனை கட்டம் கட்டமாக செயற்படுத்த இருப்பதோடு சிறு ஏற்றுமதிப் பயிர்களின் இறக்குமதியை முற்றாக தடை செய்ய முடிவு செய்துள்ளோம்.

இவற்றின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்பட்டது. எதிர்வரும் காலத்தில் இது தொடர்பிலான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

Fri, 11/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை