கொலம்பியாவில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நீடிப்பு

கொலம்பியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் வீதிகளில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி இவான் டுகு அறிவித்துள்ளார்.

தேசிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் 250,000 க்கும் அதிகமானவர்கள் பேரணி நடத்திய நிலையில், கடந்த வியாழக்கிழமை அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்ட வெடித்தது.

அமைதியாக ஆரம்பமாக ஆர்ப்பாட்டம் கலவராமாக மாறிய நிலையில் சொத்துகளுக்கு தீவைப்பது மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாயுள்ளன.

இந்நிலையில் இராணுவத்தினர் பொலிஸாருடன் இணைந்து வீதிகளில் ரோந்து செல்வார்கள் என்று இவான் டுகு குறிப்பிட்டுள்ளார்.

அரசின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஊழலுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்தது தொடக்கம் இதுவரை குறைந்தது மூவர் உயிரிழந்துள்ளார்.

தலைநகர் பொகோடாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டபோதும் அடுத்த தினமும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் திரண்டனர். பொகோடாவின் தேசிய பூங்காவுக்கு அருகில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியபோது அவர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுதிரண்டனர்.

Mon, 11/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை