மைலோ வழங்கும் மாபெரும் சைக்கிள் போட்டி

நெஸ்லே நிறுவனத்தின் பிரபலமான மற்றும் போசணை மிக்க சக்திக்கான வர்த்தகநாமமான மைலோ மீண்டும் ஒரு முறை 1,000 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு புத்தம்புதிய மவுண்டன் பைசிக்கிள்களை பரிசாக வழங்கவுள்ளது. இப்போட்டி எதிர்வரும் 30 வரை இடம்பெறவுள்ளதுடன், Milo RTD பக்கட் ஒவ்வொன்றின் பின்புறத்திலும் காணப்படுகின்ற தனித்துவமான குறியீட்டை எந்தவொரு மொபைல் வலையமைப்பிலிருந்தும் 6456 என்ற இலக்கத்திற்கு [MILO CODE NAME AGE] என்ற வடிவில் எஸ்எம்எஸ் செய்வதன் மூலமாக வெற்றி கொள்ளும் வாய்ப்பினை மிக இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

'எமது மாபெரும் சைக்கிள் பரிசு மழை போட்டிக்கு இது வரை சாதனைமிக்க எண்ணிக்கையில் நுழைவு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை எமக்கு பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைலோ மீது சிறுவர்கள் கொண்டுள்ள நேசம் மற்றும் வர்த்தகநாமத்தின் மீது அன்னையர் கொண்டுள்ள நம்பிக்கை ஆகியவற்றிற்கு இது சான்று பகருகின்றது. தற்போது தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாகவும் இந்த போட்டி முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இது வரை மொத்தமாக 4,000 பைசிக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. போசணைமிக்க சக்தியை வழங்கி இலங்கை மக்களை உடற்பயிற்சி பழக்கவழக்கங்கள் கொண்டவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் மாற்றியமைத்து, விளையாட்டுக்கள் மூலமாக வளர்ச்சிக்கான உந்துசக்தியை வழங்கவேண்டும் என்ற தனது நோக்கத்திற்கு அமைவாக உடற்பயிற்சி மிக்க வாழ்க்கைமுறையை வளர்க்கும் இலக்குடன் மைலோ செயற்பட்டு வருகின்றது. உடற்பயிற்சியுடன், வளர்ச்சி, ஐக்கியம் மற்றும் தைரியத்திற்கான திடசங்கல்பத்துடன் இலங்கை மக்களுக்கு உந்துசக்தியளிக்கும் முயற்சிகளை இந்த வர்த்தகநாமம் முன்னெடுத்து வந்துள்ளது. உடற்பயிற்சிகளை முன்னெடுத்து, தேகாரோக்கியத்துடன் திகழ்வதற்கு சிறுவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு உதவும் வகையில் மேலும் 1,000 மவுண்டன் பைசிக்கிள்களை வழங்குவதன் மூலமாக ஒருவரின் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் எமது அன்றாட முயற்சி உண்மையில் எமக்கு பெருமையளிக்கின்றது,' என்று நெஸ்லே உற்பத்திப் பிரிவு சந்தைப்படுத்தல் முகாமையாளரான மொஹமட் அலி கருத்து வெளியிட்டார்.

நெஸ்லே நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஃபேப்ரிஸ் காவலீன் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், '30 ஆண்டுகளுக்கும் மேலாக உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையின் அடையாளமாக மைலோ திகழ்ந்து வந்துள்ளது. வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான எதிர்காலத்திற்குப் பங்களிப்பாற்ற வேண்டும் என்ற எமது நோக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்லாயிரக்கணக்கான எமது சிறுவர்கள் உடற்பயிற்சி செயற்பாடுகளை முன்னெடுத்து, சிறந்த ஆரோக்கியம், உடல்நலன், ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவ ஆற்றலுடன் அனைத்து திறமைகளும் கொண்டவர்களாக விருத்தியடைவதை நாம் ஊக்குவித்து வந்துள்ளோம். உள்நாட்டில் எமது வலுவான அடிச்சுவடு மற்றும் ஆழமாக வேரூன்றியுள்ளதன் வெளிப்பாடே இது. 2030 ஆம் ஆண்டளவில் 50 மில்லியன் சிறுவர்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை முன்னெடுக்க உதவும் எமது உலகளாவிய இலட்சியத்தை அடைந்து கொள்வதற்காக நாம் முன்னெடுத்துள்ள பல்வேறு செயற்திட்டங்களில் ஒன்றாக மாபெரும் சைக்கிள் பரிசு மழை அமைந்துள்ளது,' என்று குறிப்பிட்டார்.

Thu, 11/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை