தொ. தே. முன்னணியின் உறுப்புரிமை பெற்றுக்கொள்ளும் நிகழ்வு

தொழிலாளர் தேசிய முன்னணியின் உறுப்புரிமை பெற்றுக்கொள்ளும் நிகழ்வு முன்னணியின் ஹற்றன் தலைமை காரியாலயத்தில் அண்மையில் இடம்பெற்றது.

தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்வரன், உபதலைவர் எ.ராம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பணிப்பாளர் எஸ். நந்தகுமார் உட்பட பலரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் மஸ்கெலியா, நோர்வூட், கொட்டகலை, வட்டவலை, நுவரெலியா பகுதிகளை சேர்ந்த பலர் உறுப்புரிமைகளை பெற்றுக்கொண்டனர்

எதிர்வரும் 04 ஆம் திகதி தொழிலாளர் தேசிய முன்னணியின் பேராளர் மாநாடு ஹற்றன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் அமைச்சர் பழனி திகாம்பரம் , பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆகியோரின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது தொழிலாளர் தேசிய முன்னணியின் பதவிகளுக்கான போட்டிகளும் இடம்பெறவுள்ள நிலையில் போட்டிகளுக்கான விண்ணப்பபடிவங்களும் நேற்று விநியோகிக்கப்பட்டது.

Sat, 11/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை