மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி: ஹிலரிக்கு அழுத்தம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பலர் தமக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அமெரிக்க முன்னாள் இராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். இருந்தபோதும் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அவர் கூறினார். தனது மகளுடன் இணைந்து பி.பி.சி வானொலிக்கு அளித்திருந்த பேட்டியின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கிளிண்டன், தற்போதைய ஜனாதிபதி டொனல்ட் டிரம்பிடம் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, அடுத்தாண்டு தேர்தலில் டிரம்புடன் அவர் மீண்டும் மோதக்கூடும் என்பது பற்றிய செய்திகளை அமெரிக்க ஊடகங்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன. இத்தகைய ஊகங்களுக்கு உறுதியான எந்த பதிலையும் அளிக்காமல் வந்த கிளிண்டன், அடுத்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போதைக்கு தமக்கு எந்தவொரு திட்டமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

எனினும் டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவதே தமது விருப்பம் எனத் தெரிவித்த கிளிண்டன், இதற்கான வலுவான பிரசாரத்தை அமைப்பதற்கு ஜனநாயகக் கட்சியினருக்கு உதவப்போவதாகத் தெரிவித்தார்.

Thu, 11/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை