இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் பேச்சு நடத்த தயாராகவே உள்ளோம்

புதிய ஜனாதிபதிக்கு எமது வாழ்த்துகள்

மக்களின் ஆணையின் பிரகாரமே நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் அதேவேளை, தமிழ் மக்கள் தமது கொள்கையில் உறுதியாக உள்ளனர் என்பதையே தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன. அரசியல் ரீதியாக ஸ்திரமான நிலைமை ஏற்பட்டது இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவே உள்ளோமென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட

 

ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தெரிவு தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கோட்டாபய ராஜபக்ஷ மக்களின் ஆணையின் பிரகாரமே நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு நாம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். என்றாலும், இனவிடுதலைத் தொடர்பில் தமிழ் மக்கள் உறுதியாகவுள்ளனர். அதனையே தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன.

ஸ்திரமான அரசியல் சூழல் மற்றும் அவரது கொள்கைகள் தொடர்பில் தெளிவான நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டதும் நாம் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவே உள்ளோம் என்றார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 11/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை