பெண்களை அடுப்படிக்குள் முடக்கும் சிலரது எண்ணம் நிறைவேறாது

 மன்னாரில் மேயர் ரோசி சேனாநாயக்க

பெண்களை அடுப்படிக்குள் முடக்கிப் போட நினைக்கும் சிலரது எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது என கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்தார்.

எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்வதற்காக வடக்கில் உள்ள பெண்களை அமைப்பினரை சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரேமதாஸ மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் இணைந்து வடக்கில் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட பெண்கள் அமைப்பினரை சந்திக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (5) நானாட்டான் பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேனநாயக்க இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், அமைதியும் மனித நேயமும் மிக்க சஜித் பிரேமதாச ஜனாதிபதி தோதலில் போட்டியிடுகின்றார்.அவர் பெண்களின் முன்னேற்ற விடயங்களில் மிகவும் அக்கரையுடனும் கரிசனையுடனும் இருக்கின்றார். சிலரைப் போல் பெண்களின் கண்ணீரோடு அவர் விளையாடவில்லை. அதன் அடிப்படையில் தான் பெண்களின் நலன் சார்ந்து பத்து அம்சங்களை கொண்ட கைநூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் கொழும்பில் பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இவ்வாறான ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளோம். அதன் மூலம் இந்த நாட்டில் எதிர் காலத்தில் மகளிரான உங்களுக்கு முதன்மையான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.

அது மட்டுமல்ல மன்னாரில் நான் கவனித்த வகையில் பெண்கள் முன்னேற்றம் என்பது அடி மட்டத்து நிலையில் உள்ளது.அதனால் பெண்களின் தொழில் முயற்சிகளுக்கான சகல விடயங்களும் செய்து தரப்படும். அது மட்டுமல்ல பாடசாலைகளில் படிக்கும் பெண் பிள்ளைகள் பற்றி அவர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.சிலர் பெண்களை அடுப்படிக்குள் முடக்கிப் போடும் எண்ணத்தில் செயற்பட்டு வருகிறார்கள்.அவர்களின் கனவு பலிக்காது.

அதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

 

மன்னார் குறூப் நிருபர்

Thu, 11/07/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக