சஜித் பிரேமதாச அறுபத்தைந்து வீத வாக்குகளை பெற்று ஜனாதிபதியாவார்

பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்

சஜித் பிரேமதாச அறுபத்தைந்து வீதமான வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவாவார் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.

கந்தளாய் பேராறு பகுதியில் புதிய ஜனநாயக முண்ணனி ஜனாதிபதி வேற்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்றிரவுமுன்தினம் (12) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலே இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மஹிந்தவின் காலத்தில் நீதித்துறை, சட்டத்துதுறை, பொலிஸ்துறை, அனைத்தையும் பதினெட்டாவது திருத்தம் மூலம் மாற்றி அமைத்து தனது கைக்குள் வைத்துக்கொண்டு ஹிட்லர் போன்று செயற்பட்டதை நாம் அறிவோம்.

அன்று 159 ரூபாவுக்கு பெற்றோலையும், டீசல் 140 ரூபாவுக்கும், 110 ரூபாவுக்கு மண்ணெண்ணையும் விற்று இந்நாட்டில் பொருளாதாரத்தினை நடாத்தி வந்தார்.

எமது அரசாங்கத்தில் பெற்றோலை 134 ரூபாவுக்கும், 104 ரூபாவுக்கு டீசலையும், 60 ரூபாவுக்கு மண்ணெண்ணையும் விற்கின்றோம். அப்போது சரத் என் சில்வா சட்டமா அதிபராக இருந்தபோது குறைத்து விற்பனை செய்ய வேண்டும் என தீர்ப்பு வழங்கிய போதும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை கிளித்தெறிந்தவர் மஹிந்த ராஜபக்ஷ.

இந்நாட்டில் சட்டத்தினையும் ஒழுங்கையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாற்றி அமைத்து, ஐம்பது வீதமான கடன்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இன்று நாடு ஒரு சுமுகமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இவ்வேளையில் தான் ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்குகின்றோம்.

ஐக்கிய தேசியக் கட்சியில் சஜித்தை இறக்கினால் வெல்லுவார் என்று எப்போதோ சொல்லியிருப்போம். இன்று அது அனைத்தும் பலிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் சஜித் வெற்றி பெறுவார். நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களின் பொருளாதாரம் மற்றும் கைத்தொழில் இன்னோரன்ன அனைத்தும் வளர்சியடையும், அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிய அனைத்து செயற்பாடுகளும் நடைபெறும் என்றார்.

கந்தளாய் தினகரன் நிருபர்

Thu, 11/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை