பொத்துவில் கனகர் 'கிராம மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு வெற்றி

காணி அளவீட்டுப் பணிகள் ஆரம்பம்

வன ஜீவராசிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலிருந்த பொத்துவில் கனகர் கிராம தமிழ் மக்களின் காணிகளை மீள கையளிக்கும் வகையில் அவற்றை அளவீடு செய்யும் பணிகள் ஆரம்பி க்கப்பட்டுள்ளன.

இதன்படி நேற்றைய தினம் 225 ஏக்கர் காணி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் பணிப்புரையின் கீழ்

பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜா முன்னிலையில் அளவீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அக்கரைப்பற்று – பொத்துவில் ஏ 4 பிரதான வீதியில் 60ஆம் கட்டை ஊறணியில் பகுதியில் உள்ள தமது பூர்வீக காணியை விடுவிக்க கோரி கடந்த 450 நாட்களாக காணி மீட்பு போராட்டத்தில் இம் மக்கள் ஈடுபட்டுவந்தனர்.

இவ்வாறான நிலையிலேயே இவ் அளவீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் 22 ஏக்கர் காணியை வனபரிபாலன திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதியின் வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் நிலங்களை விடுவிக்கும் வேலைத்திட்டத்தின் இந் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காரைதீவு குறூப் நிருபர்

Fri, 11/08/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக