நாட்டின் இறைமை இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது

மஹரகம இறுதித் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க மேடைக்கு வருகை தந்தபோது...

1988,1989ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மக்களை ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கிய ஆட்சியாளர்களுக்கும், நாட்டை ஆக்கிரமித்த வெளிநாட்டு சக்திகளுக்கும் எதிரானதேயாகும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

காலியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற

பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

கொழும்பு துறைமுகத்தின் முக்கிய பகுதிகள், திருகோணமலை எண்ணைக் குதங்கள், அம்பாந்தோட்டை துறைமுகம் என நாட்டின் அனைத்து வளங்களையும் சர்வதேச நாடுகளின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கியுள்ளோம். நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார கேந்திர நிலையங்கள் வெளிநாடுகளின் கைகளில் ஒப்படைத்துள்ளோம். இந்த இருதரப்பினரும் சேர்ந்து இந்த நாட்டை சர்வதேசத்திற்கு தாரை வார்த்துள்ளமை மாத்திரமே நடைபெற்றுள்ளது. வெளிநாடுகளுக்கு எமது நாட்டை அடிமைப்படுத்தும் வகையில் பல்வேறு உடன்படிக்கைகளில் இருதரப்பினரும் கைச்சாத்திட்டுள்ளனர். இன்னமும் பல உடன்படிக்கைகளை செய்துக்கொள்ள முற்படுகின்றனர். அதனால் அன்றைவிட இன்று நாட்டின் சுயாதீனமும் இறைமையும் கேள்விக்குரியாகியுள்ளது. தேசிய வளங்களை பாரிய நிறுவனங்களுக்கு கொடுத்து முடித்துவிட்டனர். ராஜபக்ஷர்களின் ஆட்சியில் நிலப்பரப்பில் பெரும் பகுதியை அமெரிக்காவுக்கு விற்பனை செய்துவிட்டனர். கல்பிட்டியில் உள்ள தீவு ஒன்றையும் தாரைவார்தனர்.

1988-−1989ஆம் ஆண்டு போராட்டத்தை மாற்று வடிவத்தில் இன்று முன்னெடுக்க வேண்டிய தேவையே எமக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 11/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை