கலிபோர்னியா காட்டுத் தீ: நிதி அளிக்க டிரம்ப் மறுப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கலிபோர்னியாவுக்கான அரசாங்க நிதியை முழுமையாகக் கொடுக்கப்போவதில்லை என்று எச்சரித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கலிபோர்னியா ஆளுநர் கெவின் நியுசம், சுற்றுச்சூழல் தொடர்பான டிரம்பின் கொள்கைகளைக் குறைகூறியதைத் தொடர்ந்து டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அண்மைய வாரங்களில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் கிட்டத்தட்ட 100,000 ஏக்கர் நிலம் அழிந்துபோனது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேற நேரிட்டது. அதை விமர்சனம் செய்த டிரம்ப், கலிபோர்னியா ஆளுநர் கெவின் நியுசம், காடுகளைச் சரியாகப் பேணவில்லை என்றார்.

இது போன்ற காட்டுத் தீச் சம்பவங்கள் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படுவதாகவும் கலிபோர்னியா ஆளுநர் நிதியுதவிக்காக அரசாங்கத்தை நாடுவதாகவும் டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டார்.

Tue, 11/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை