கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு செல்ல இணைப்புச் சேவை

கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு பொது போக்குவரத்தில் பயணிப்போர் சுமார் அரை மைல் தூரத்திற்கு அதிகமாக நடந்தே செல்ல வேண்டியிருந்த நிலையை சீர் செய்யும் வகையில் அத்தூரத்தை கடக்க விசேட இணைப்புச் சேவைகள் நேற்று முன்தினம் முதல்

ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பதினைந்து நிமிடத்துக்கு ஒரு முறை இந்த இணைப்புச் சேவை இடம்பெறும்.  

நேற்று முன்தினம் இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் சாதாரண பயணிகளைப் போன்றே அந்த தூரத்தை நடந்தே விமான நிலையத்தை வந்தடைந்தார். அவர் அதன் மூலம் முன்மாதிரியாகச் செயற்பட்டார். எனினும் அதனைப் பின்பற்றி எதிர்காலத்தில் அமைச்சர்களும் இவ்வாறு செயற்படுவது அவர்களது முடிவாகும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.  

எனினும் அமைச்சர்கள் தமதுக்குள்ள உரிமையை பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் அவர்கள் விருப்பம் போல பயணிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்  

 

Sat, 11/30/2019 - 09:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை