பொதுத் தேர்தலோடு சர்வஜன வாக்ெகடுப்பும் நடத்த வேண்டும்

அரசியலமைப்பின் 4 முக்கிய அம்சங்கள்;

அரசியலமைப்பில் இடம்பெறும் நான்கு முக்கிய அம்சங்கள் தொடர்பாக கட்டுப்பாடற்ற வகையிலான சர்வஜன வாக்கெடுப்பொன்றை பொதுத் தேர்தலுடன் சேர்த்து நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் பேத் பைன்டர் மன்றத்தின் ஸ்தாபகருமான மிலிந்தமொரகொட யோசனையொன்றை முன்வைத்திருக்கிறார்.

இவ்வாறான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே எமது அரசியலமைப்பின் 86 ஆவது சட்டக் கோவையில் உள்ளடக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் குறிப்பிடும் நான்கு அரசியலமைப்பு அம்சங்களும் கீழே குறிப்பிடப்படுகின்றன.

*இலங்கை மக்கள் முழு அளவிலான ஜனாதிபதி முறையை விரும்புகிறார்களா? அல்லது வெஸ்ட் மின்ஸ்டர் முறையிலான பாராளுமன்ற முறையை விரும்புகிறார்களா?

*மாகாண சபை முறையை இரத்துச் செய்ய விரும்புகிறார்களா? அல்லது அதற்குப் பதிலாக அதிகாரமுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் வேண்டும் என்று விரும்புகிறார்களா?

*தற்போதைய விகிதாசார பிரதிநிதித்துவ முறை மாற்றப்பட்டு தேர்தல்களில் அதிக வாக்குகளைப் பெறுபவர் வெற்றியாளர் என்ற முறையை விரும்புகிறார்களா?

* இலங்கை மக்கள் தேசிய, மத, இன மற்றும் பிரதேச பல்வகைத் தன்மை தொடர்பாக பேசுவதற்கு செனட் சபைபோன்ற இருமன்ற முறை அமைக்கப்படுவதை ஆதரிக்கிறார்களா? குறிப்பிட்ட 4 கேள்விகள் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பொன்றை பொதுத் தேர்தலுடன் சேர்ந்து நடத்துவது சிக்கலான விடயமாக இருக்கலாம். எனினும், அவ்வாறான சர்வஜன வாக்கெடுப்பொன்றை தனியாக நடத்துவதை விடத் தேர்தலுடன் சேர்ந்து நடத்துவது அதனை முறையாக நடத்த உதவுவதுடன் பொருளாதார ரீதியிலும் இலாபகரமானதாகும்.

நமது நிருபர்

Wed, 11/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை