ரக்பி உலகக் கிண்ணம் தென்னாபிரிக்கா வசம்

ஜப்பானில் நடைபெற்ற 9ஆவது ரக்பி உலகக் கிண்ண தொடரில் நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக தென்னாபிரிக்க அணி உலகக் கிண்ணத்தை கைப்பற்றிது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ரக்பி உலகக் கிண்ணம் கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி ஜப்பானில் ஆரம்பமானது.

20 நாடுகள் பங்கேற்ற 2019 ரக்பி உலகக் கிண்ண தொடரின் இறுதிப்போட்டி கடந்த சனிக்கிழமை யொகொஹாமா சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில், 2007ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்து – தென்னாபிரிக்க அணிகள் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டியில் மோதின.

80 நிமிடங்கள் முடிவில் 12–32 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறை உலகக் கிண்ணத்தை தென்னாபிரிக்கா கைப்பற்றியது. இரண்டாவது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணிக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது.

தென்னாபிரிக்கா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இங்கிலாந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

2019 வரை நடந்த ரக்பி உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து அணி மூன்று முறை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் அதிக முறை உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அணி பட்டியலில் நியூசிலாந்தை சமன் செய்துள்ளது தென்னாபிரிக்கா.

இதுவரை, நியூசிலாந்து (1987, 2011, 2015), தென்னாபரிக்கா (1995, 2007, 2019), அவுஸ்திரேலியா (1991, 1999), இங்கிலாந்து (2003) ஆகிய நாடுகள் ரக்பி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன.

Mon, 11/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை