பாக். பிரதமர் இம்ரான் கான் பதவி விலக ஆர்ப்பாட்டக்காரர்கள் கெடு

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடிக்காக பிரதமர் இம்ரான் கானை பதவி விலகக் கோரி தலைநகர் இஸ்லாமாபத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியவாதிகள் முகாமிட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களை ஒட்டி முக்கிய அரச கட்டடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதோடு மேலதிக கலகமடக்கும் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜமியத் உலமாயே இஸ்லாம் கட்சியின் தலைவர் மெளலானா பஸ்லுர் ரஹ்மானின் தலைமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த வியாழக்கிழமை பேரணியாக தலைநகரை முற்றுகையிட்டனர்.

இம்ரான் கானை பதவி விலக அழுத்தம் கொடுக்கும் ரஹ்மான், பாராளுமன்றம் மற்றும் பிரதமரின் வாசஸ்தலம், அரச அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்திருக்கு சிவப்பு வலய பகுதிக்கு பேரணி நடத்தப்போவதாக எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையாகும்போது சிவப்பு வலகத்தை நோக்கிச் செல்லும் பாதைகள் கொள்கலன்கள் இட்டு தடுக்கப்பட்டு, அங்கு மேலதிக துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன.

“இரண்டு நாட்களுக்குள் பிரதமர் பதவி விலகாவிட்டால் இந்த பெரும் கூட்டம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பிரதமரை கைது செய்யும்” என்று ரஹ்மான் கடந்த வெள்ளிக்கிழமை எச்சரித்திருந்தார். நாட்டின் பலம்மிக்க இராணுவம் இம்ரான் கான் பக்கம் சாரக் கூடாது என்றும் அவர் கோரினார்.

எனினும் பதவி விலகலுக்கு இடமில்லை என்று இம்ரான் கான் அறிவித்துள்ளார். “ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். பாகிஸ்தான் இராணும் ஒரு பக்கச்சார்பற்ற அரச நிறுவனமாக ஜனநாயக ரீதியில் தெரிவான அரசுக்கே ஆதரவு அளிக்கும்” என்று பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கத்தக் குறிப்பிட்டார்.

Mon, 11/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை