தெற்காசிய போட்டிக்கான இலங்கை மெய்வல்லுநர்கள் அணி அறிவிப்பு

நேபாளம் காத்மண்டு நகரில் ஆரம்பமாகவுள்ள 13வது தெற்காசிய விளையாட்டு விழாவில் கலந்துகொள்ள 55 பேரின் பெயர்கள் இலங்கை மெய்வல்லுநர்கள் சங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன..

அக்குழாம் தற்போது விளையாட்டுத்துறை அமைச்சின் அனுமதிக்கு முன்வைக்கப்பட்டுள்ளதோடு ஒரு போட்டிக்கு இரண்டு வீரர்கள் என்ற ரீதியில் தெரிவு செய்ய மெய்வல்லுநர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு முன்னர் ஒரு போட்டிக்காக அனுசரணை வழங்கும் நேபாளத்தைத் தவிர ஏனைய நாடுகள் ஒரு வீரரை மாத்திரம் பங்குபற்ற அனுமதிக்க போட்டி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்யப்பட்டிருந்தார்கள். அதன்படி முன்னைய சந்தர்ப்பங்களில் 33 வீர, வீராங்கனைகளைக் கொண்ட அணியே நேபாளம் செல்ல தெரிவு செய்யப்பட்டிருந்தது.

கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற 12வது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை மெய்வல்லுநர் போட்டிகளில் 9 தங்கப்பதங்கங்களைப் பெற்றிருந்ததோடு தெற்காசியாவின் வேகமான வீரர் மற்றும் வீராங்கனையான ஹிமாஷ ஏஷான், மற்றும் ருமேஷிகா ரத்நாயக்க ஆகியோர் 100 மீற்றர் போட்டியில் வெற்றி பெற்றார்கள்.

இம்முறை தனியான போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்ற வினோத், சுரன்ஜய, இந்துனில் ஹேரத், நிமாலி லியனாராச்சி இம்முறை குழாமிலும் இணைந்துள்ளார்கள்.

 

ஆண்கள் அணி:

ஹிமாஷ ஏஷான் (100 மீற்றர் மற்றும் 100 மீற்றர் அஞ்சலோட்டம்), வினோத் சுரக்ஷய 100 மீற்றர், 200 மீற்றர் 100 மீற்றர் அஞ்சலோட்டம்), ஏ எஸ். எம். சபான் (200 மீற்றர்), எஸ் அருணதர்ஷன (400 மீற்றர், 400 மீற்றர் அஞ்சலோட்டம்), ஏ. எம். எல். பீ. குணதிலக்க (400 மீற்றர் மற்றும் 400 மீற்றர் அஞ்சலோட்டம்), எச். ஈ. எம். ஐ. ஜீ. இந்துனில் ஹேரத் (800 மீற்றர்), ஜி. ஆர். சதுரங்க (800 மீற்றர்), எம்.எம். எம். குபுன் குஷாந்த (1500 மீற்றர்), ஆர். ஏ. சஜிவ லக்மால் (1500 மீற்றர்), ஆர். எம். எஸ். புஷ்பகுமார (5000 மீற்றர் மற்றும் 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டம்), டபிள்யூ வீ. எம். யூ. குமார (5000 மீற்றர், மற்றும் 10,000 மீற்றர்) கே. சண்முகன் (10,000 மீற்றர்) ஆர். ரொஷான் டி ரணதுங்க (110 தடைதாண்டல்) அசங்க ரத்னசேன (400 மீற்றர் தடைதாண்டல்) எச்.எம். ஈ. யூ. பி. ஹேரத் (3000 மீற்றர் தடைதாண்டல்) ஏ. எம். யுபுன் அபேயகோன் (100 மீற்றர் அஞ்சலோட்டம்) பி. டி. சி. எஸ். தர்மகீர்த்தி (100 மீற்றர் அஞ்சலோட்டம்), வை சி. எம். யோதசிங்க (100 மீற்றர் அஞ்சலோட்டம்) ஆர். எம். ஆர். என். ராஜகருணா (400 மீற்றர் அஞ்சலேட்டம்), எச். எம். திலிப் ருவன் (400 மீற்றர் அஞ்சலோட்டம்) வை. எம். டபிள்யு எஸ். ஏ. குணரத்ன (400 மீற்றர் அஞ்சலோட்டம்), எஸ். டி. உஷான் திவங்க பெரேரா (உயரத் பாய்தல்),டபிள்யூ பி. அமல ஜயசிறி (நீளம் பாய்தல்), ஜே. எச். ஜி. சம்பத் (நீளம் பாய்தல்) எம். என். நப்ரின் அஹமட் (முப்பாய்ச்ல்), எல். பி. ஷேசான் தனஞ்ஜய (முப்பாய்ச்சல்) டபிள்யூ. சமித் பெர்னாந்து (குண்டெறிதல்), எஸ். பி. ஜே. பந்துல (பரிதிவட்டம் எறிதல்), ஆர். எம். எஸ். ஜே. ரணசிங்க ஈட்டி எறிதல்) ஆர். பி. டபிள்யு எல். தயாரத்ன (ஈட்டி எறிதல்), டபிள்யூ. எம். எஸ். குமார (மரதன்), தம்மிக அருணசிறி (மரதன்),

 

பெண்கள் அணி:

டபிள்யூ. வி. எல். சுகந்தி (100 மீற்றர், 100 மீற்றர் தடைதாண்டல், 100 மீற்றர் அஞ்சலோட்டம்), டீ. டி. அமாஷா த சில்வா (100 மீற்றர், 100 மீற்றர் அஞ்சலோட்டம்), சர்மிலாஜேன் (200 மீற்றர், 100 மீற்றர் அஞ்சலோட்டம்), நதீஷா ராமநாயக்க (200 மீற்றர், 400 மீற்றர், 400 மீற்றர் அஞ்சலோட்டம்), ஈ. கே. மதுஷானி (400 மீற்றர், 400 மீற்றர் தடைதாண்டல், 400 மீற்றர் அஞ்சலோட்டம்), டபிள்யூ. கே. எல். ஏ. நிமாலி (800 மீற்றர், 1500 மீற்றர்), கே. ஜி. டி. எம். எஸ். குமாரசிங்க (800 மீற்றர், 400 மீற்றர் அஞ்சலோட்டம்), ஜி. டி. ஏ. அபேரத்ன (1500 மீற்றர்) யூ. கே. என். ராமநாயக்க (5000 மீற்றர், 3000 மீற்றர் தடை ஓட்டம்), ஹிருனி விஜேரத்ன (10,000 , மரதன்), ஏ. என். எல். ஆரியதாச (10,000 மீற்றர்), ஆர். ஏ. ஐ. எஸ். ராஜசிங்க (100 மீற்றர் தடைதாணடல்), என். ஜி. டீ. என். லக்மாலி (400 மீற்றர் தடைதாண்டல் அஞ்சலோட்டம்) டி. கே. ரணசிங்க (உயரம் பாய்தல்) எச். டி. விதுஷா லக்ஷானி (நீளம் பாய்தல், முப்பாய்ச்சல்) அஞ்சனி குலவங்ச (நீளம் பாய்தல்), டபிள்யூ. டி. கே. பெர்னாந்து (குண்டெறிதல்), ஏ. எச். வீ. வீ. லக்மாலி (பரிதிவட்டம்), பி. எல். நதீஷா லக்மாலி (ஈட்டி எறிதல்), மதுமாலி பெரேரா (மரதன்), சாரங்கி சில்வா (100 மீற்றர் அஞ்சலோட்டம்), சதீப ஹென்டஸன் (100 மீற்றர் அஞ்சலோட்டம்), எம். ஓ. உதயாங்கனி (100 மீற்றர் அஞ்சலோட்டம்).

Fri, 11/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை