ஜனநாயகத்தை பாதுகாக்க ராஜபக்‌ஷவினரை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டாம்

மீண்டும் ராஜபக்ஷக்களை அழைப்பது ஜனநாயக நோக்கத்துக்காகவென்றால், அதனைச் செய்ய வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க அண்மையில் கம்பஹாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்: ஐ. தே. க. , மொட்டு ஆகிய இரண்டு கட்சிகளிலுமே ஊழல் செய்பவர்களும் மற்றும் கள்வர்களுமே உள்ளார்கள். இந்நாட்டு பிள்ளைகளின் பொறுப்பை எமது நிர்வாகத்தின் கீழ் அரசே பொறுப்பேற்கும்.

சில ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் மரண பயத்தில் இருந்தார்கள். சிலர் நாட்டைவிட்டு சென்றார்கள். அவ்வாறான பயங்கரவாதம் அன்றிருந்தது. ஊடகங்களுக்கு குண்டெறிந்தார்கள்.

ஊடகவியலாளர்களை கொலை செய்தார்கள்.

இது யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நடந்ததல்ல. அதன்பின்னர் ஜனநாயகம் இல்லாத நாடொன்றே இருந்தது. விஷமற்ற நீரைகேட்டு போராட்டம் நடத்திய ரதுபஸ்வல மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். மூன்று பேர் மரணமடைந்தார்கள்.

ஊழியர்களின் சேமலாப நிதியத்தை கொள்ளையடிக்க சட்டமொன்றை கொண்டு வந்தார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுநாயக்க வர்த்தக வலய இளைஞர் யுவதிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

ரோஷான் சானக்கவை சுட்டுக்கொன்றார்கள். அதிகமானோருக்கு காயமேற்பட்டது. அவ்வேளையில் என்ன நடந்தது? அப்போது பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரியவாகும். அதற்கான பொறுப்பை ஏற்று அவரை ராஜினாமாச் செய்யச் சொன்னார்கள். அவர் ராஜினாமாச் செய்தார். அதன்பின்னர் அவரை பிரேஸிலின் தூதுவராக்கி அனுப்பினார்கள்.

ஜனாதிபதி தேர்தல் வந்தபொது அவரை இலங்கைக்கு அழைத்து பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சின் செயலாளர் பதவியை வழங்கினார்கள்.

Tue, 11/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை