பயன்படுத்தாத ட்விட்டர் கணக்குகள் முடக்கம்

தொடர்ந்து ஆறு மாதகாலம் பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகளை நிரந்தரமாக முடக்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தின் புதிய கொள்கை மற்றும் நெறிமுறைகளின்படி, தொடர்ந்து 6 மாதகாலம் பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை செயலற்ற கணக்குகளாகவே அந்நிறுவனம் கருதுகிறது. செயலற்ற இலட்சக்கணக்கான கணக்குகளை முடக்குவதன் மூலம், ட்விட்டரை தொடர்ச்சியாக பயன்படுத்துவோருக்கான சேவைகளில் கூடுதல் கவனத்தைச் செலுத்தலாம் என ட்விட்டர் கருதுகிறது.

குறிப்பாக அதிகமான பயனர் பெயர்கள் திரும்பப்பெற்று தேவைப்படுவோர்களுக்கு அதை வழங்கலாம் என கருதுகிறது. இதனால் டிசம்பர் 11ஆம் திகதியிலிருந்து செயலற்ற கணக்குகளை அந்நிறுவனம் முடக்கவுள்ளது.

முடக்க நடவடிக்கைக்கு முன்பாக சம்பந்தப்பட்ட பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக அமெரிக்காவுக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட கணக்குகள் முடக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயலற்ற கணக்குகளை ரத்து செய்வதன் மூலம் ட்விட்டர் மீது ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்த முடியுமென அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

Thu, 11/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை