அபிவிருத்தி பாதைக்கு வாய்ப்பளிக்க மக்கள் முடிவெடுக்க வேண்டும்

வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகமென அனைத்துப் பதிகளிலும் வாழும் தமிழ், முஸ்லிம்,சிங்கள மக்கள் ஒற்றுமையாக உயர்த்தும் ஒரே கொடி எமது கொடிதான் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அம்பலாங்கொடையில் நேற்று (08) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

இந்த இரண்டு அரசியல் கட்சிகளுக்கும் இன்னும் 100 வருடங்கள் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தாலும் நாட்டை அழிவுப்பாதைக்கு ஈட்டுச் செல்வார்களே தவிர வேறு எவ்வித மாற்றங்களும் நாட்டில் நிகழப்போவதில்லை. நாட்டை அழிவு பாதைக்கு ஈட்டுச் செல்பவர்களிடமிருந்து விடுபட்டு நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டுசெல்லும் புதிய தரப்புக்கு வாய்ப்பளிக்க இத்தேர்தலில் மக்கள் முடிவொன்றை எடுக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கிற்கு செல்வதற்கு எமக்கு தரகர்கள் அவசியமில்லை. ராஜபக்‌ஷக்கள், ஹிஸ்புல்லா, கருணா, பிள்ளையான் மற்றும் ஈழக்கொடியை உயர்த்திய வரதராஜ பெருமாள் ஆகியோரின் தோள்மீதேறியே செல்ல வேண்டியுள்ளது. சஜித்தும் அவ்வாறுதான். எந்தவொரு அடிப்படைவாதச் சக்திகளின் தோளில் ஏறி பயணிக்காத ஒரே சக்தி தேசிய மக்கள் சக்திதான்.

நாங்கள் வடக்கு, கிழக்குக்கு சென்றோம். காத்தான்குடியில் ஒரு வெற்றிகரமான கூட்டத்தை நடத்தினோம்.

அடிப்படைவாதிகளால் அங்கு அச்சுறுத்தல் இருந்த போதிலும் நாம் மக்களை சந்தித்தோம். அதேபோன்று கல்முனை, அக்கரைப்பற்று, கிண்ணியா, மூதூர், ஓட்டமாவடி மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் மக்கள் சந்திப்புகளை எந்தவொரு அடிப்படைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் தோள்மீதேறியும் நடத்தவில்லை என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Sat, 11/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை