ஊடகவியலாளர்களை படுகொலை செய்த யுகம் மீண்டும் வர இடமளிக்கமுடியாது

ஊடக சுதந்திரத்தை ஒடுக்கி ஊடகவியலாளர்களை படுகொலை செய்த யுகம் மீண்டும் வர இடமளிக்கமுடியாது என ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்தது.

நேற்றைய தினம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாள் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க, எக்னொலி கொட, நிமல்ராஜன் உள்ளிட்டோர் மற்றும் தாக்கப்பட்டு பெரும் பாதிப்புக்குள்ளான கீத் நொயார், போத்தல, உபாலி தென்னக்கோன் போன்றவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென கோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

பல்வேறு ஊடக அமைப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஊடக சுதந்திரம் ஒடுக்கப்படுவதற்கெதிராகவும் கடந்த அரசாங்கத்தில் ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டதைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் தாங்கி நின்றனர்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் உயிர்நீத்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபம் ஏற்றப்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 11/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை