புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு

புதிய அமைச்சரவை இன்று காலை 8மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது. காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த சத்தியப் பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இதற்கிணங்க புதிய அமைச்சரவையில் 15அமைச்சர்கள் இடம்பெறுவர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கட்சிகளின் தலைவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலரும் இந்த அமைச்சரவையில் உள்வாங்கப்படவுள்ளனர்.

இளைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இம்முறை அமைச்சரவையில் உள்ளீர்க்கப்படவுள்ளனர். புதிய சபாநாயகராக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நியமிக்கப்படவுள்ளார்.

அத்துடன் சபை முதல்வராக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும் கட்சியின் பிரதம கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவும் நியமிக்கப்படவுள்ளனர். இந்த அமைச்சரவை எதிர்வரும் பொதுத்தேர்தல் வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 11/22/2019 - 08:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை