தேர்தல் ஆணையாளரை பதவி விலக கோரி போராட்டம் நடத்திய நபர் கைது தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பதவி விலக வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்புக்களின் தலைவர் மு.தம்பிராசா பொலிஸாரால் கைது செய்யப

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பதவி விலக வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்புக்களின் தலைவர் மு.தம்பிராசா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு மாவட்ட வாக்காளர்களின் விபரத்தை கோரிய போது அது சிங்கள மொழியில் தரப்பட்டதாகவும், அது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்ட போது , தமிழில் அவற்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியபோதும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காதமையால், அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டுமெனக் கோரி நேற்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் மாவட்ட செயலகம் முன்பாக உண்ணாவிரத

 

போராட்டத்தை ஆரம்பித்தார். அதனையடுத்து தேர்தல் கடமைக்காக மாவட்ட செயலகத்தில் கடமையிலிருந்த பொலிஸார் அவரை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதற்கு அவர் உடன்படாததையடுத்து, பொலிஸார் அவரை பலவந்தமாக கைது செய்து தூக்கி சென்றனர்.

யாழ்.விசேட நிருபர்

Fri, 11/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை