தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அடிபணிய முடியாது

30 ஆயிரம் இராணுவத்தினரின் உயிர்களைப் பலி கொடுத்து நாட்டை மீட்ட நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அடிபணிய முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம். பி. ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். ராஜகிரியவில் உள்ள பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரக் காரியாலயத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஐந்து கட்சிகள் இணைந்து 13 அம்சக் கோரிக்கையை முன்வைத்துள்ளமை அனைவரும் அறிந்ததே. அதில் முக்கியமாக புதிய அரசியலமைப்பின் கீழ் வடக்கு, கிழக்கை இணைத்து சுய நிர்ணய உரிமையை வழங்க வேண்டும் என்பதாகும்.

இது விடுதலைப் புலிகள் அமைப்பு ஏற்கனவே கோரிய விடயமாகும்.

முப்பதாயிரம் இராணுவத்தினரின் உயிர்களை பலிகொடுத்தது மட்டுமல்ல சுமார் 15 ஆயிரம் வீரர்களை அங்கவீனர்களாக்கி மீட்டுக்கொள்ளப்பட்ட நாட்டை மீண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதே அந்த யோசனையின் நோக்கமாகும். இந்த 13 அம்சக் கோரிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகவும் காத்திரமான நிலையிலுள்ளது.

ஐ. தே.கவுக்கு ஆதரவு வழங்க தயாரென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தை பரிசீலித்து ஆதரவு தருவோமென அவர்கள் எவரும் கூறவில்லை.

இந்நிலையில் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் பாரிய வேலைத்திட்டம் இடம்பெறுகிறது என்பதையே நாம் பொறுப்புடன் கூற விரும்கின்றோம். எவ்வாறாயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யோசனைக்கு ஐ. தே. க. வினர் இணக்கம் தெரிவிப்பார்கள் என எமக்குத் தெரியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 11/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை