அமேசான் காவலர் சுட்டுக் கொலை

பிரேசிலில் பழங்குடி மக்களின் நிலத்தைக் காக்க போராடிய இளம் செயற்பாட்டாளர் ஒருவர் சட்டவிரோத மரக்கடத்தல்காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மரன்ஹோ மாநிலத்தில் உள்ள அராரிபோயா சரணாலயத்திற்குள் கடந்த வெள்ளிக்கிழமை போலோ பொலினோ குவாஜாஜரா என்ற அந்த செயற்பாட்டாளர் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த பகுதியில் மரக்கடத்தல்காரர்களுக்கு எதிராக போராடும் அமைப்பு ஒன்றின் உறுப்பினராக அவர் இருந்துள்ளார்.

குவாஜாஜரா கொலை அமேசான் காடுகளை பாதுகாக்க போராடும் பாதுகாவலர்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறை குறித்த கவலைகளை உருவாக்கியுள்ளது.

சர்வைவல் இண்டர்நஷனல் என்ற தன்னார்வ நிறுவனத்தின் கூற்றுப்படி, இதற்கு முன்னர் அமேசான் காடுகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குறைந்தது மூன்று பேர் தங்கள் குடும்பத்தாருடன் சேர்த்து கொல்லப்பட்டனர்.

பூர்வகுடி மக்களின் நலனுக்காக இயங்கிய அதிகாரி ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் டபடிங்கா நகரில் கொலை செய்யப்பட்டார்.

Mon, 11/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை