சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு! தங்கம் வென்ற ரிசபா கௌரவிப்பு

சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றின் மூலமாக தங்கம் வென்ற மு/தண்டுவான் அ.த.க.பாடசாலை மாணவி செல்வி செ.ரிசபா கௌரவிக்கப்பட்டார்

பளுதூக்கல் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுக்கொண்ட மு/தண்டுவான் அ.த.க.பாடசாலை மாணவி செ.ரிசபா (20-.10-.2019) ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு நெடுங்கேணி மாடுச்சந்தி வெள்ளைப்பிள்ளையார் ஆலய 'கற்பகா' அறநெறிப்பாடசாலையில் ஏழைகளின் இதயம் கந்தப்பிள்ளை திலீபனின் நிதியுதவியுடன் சிறப்பாக நடைபெற்ற சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார்.

கௌரவிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் . சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் வடமாகாணசபை சுகாதார அமைச்சர் . வைத்தியர் .சத்தியலிங்கம், கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டபுதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் . சத்தியசீலன்

மு/இத்திமடு அ.த.க.பாடசாலை அதிபர், மு/அலைகல்லுப்போட்டகுளம் அ.த.க.பாடசாலை அதிபர், ஆகியோர் சாதனையாளர்களை கௌரவித்தனர்.

2019ம் ஆண்டு தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான பளுதூக்கும் போட்டியில் 59 கிலோ கிராம் நிறைப்பிரிவில் முதலாமிடத்தைப் பெற்று தங்கம் வென்ற மு/தண்டுவான் அ.த.க.பாடசாலை மாணவி செல்வி. செ.ரிசபா மற்றும் மாணவி தங்கம் வெல்வதற்காக சிறந்த வழிகாட்டியாக செயற்பட்ட பாடசாலை அதிபர் கு.பஞ்சலிங்கம் மாணவியை சிறந்த முறையில் பயிற்றுவித்த ஆசிரியர்களான என்.குணாளன், செ.வினோதன் ஆகியோரும் 2019 தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சிறப்புச்சித்தியடைந்த மு/தண்டுவான் அ.த.க.பாடசாலை மாணவர்களான செல்வன். இசைப்பிரியன், செல்வன். நிஸ்மிதன், செல்வி. கம்சனா மு/அலைகல்லுப்போட்டகுளம் அ.த.க.பாடசாலை மாணவி செல்வி. அகழிசை ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

மாங்குளம் குரூப் நிருபர்

Mon, 11/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை