புலம் பெயர்ந்தோருக்கான சர்வதேச நிறுவன அணி வெற்றி

வெளிநாட்டுத் தூதரகங்களுக்கிடையிலான மென்பந்து சுற்றுப்போட்டி:

இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு-02இல் உள்ள மலே விளையாட்டு மைதானத்தில் தென்னாபிக்காவின் இலங்கைக்கான தூதரகத்தின் உயர் ஸ்தானிகர் ரொபினா பி மார்க்ஸ் தலைமையில் இடம்பெற்றது.

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களின் அலுவலர்கள் மற்றும் இலங்கையில் உள்ள சர்வதேச நிறுவனங்ககிடையிலான இப்போட்டியில் சுமார் 13 கழகங்களும் பங்கு பற்றின. இப்போட்டிகளை தென்னாபிக்காவின் இலங்கைக்கான தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் ரொபினா பி மார்க்ஸ் ஏற்பாட்டில் உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரி எம்.எஸ்.எம்.சிராஜின் வழி நடத்தலில் இடம் பெற்றது. இறுதிப் போட்டியில் கனடா நாட்டின் தூதரக அணியும் புலம் பெயர்ந்தோருக்கான சர்வதேச நிறுவன அணியும் பங்குபற்றின.

இவ்இறுதிப் போட்டியில் புலம் பெயர்ந்தோருக்கான சர்வதேச நிறுவன அணியினர் வெற்றி பெற்று சம்பியன் கேடயத்தை சுவீகரித்துக் கொண்டனர். இதன்போது சிறந்த வீரர்களுக்கான நினைவுச்சின்னங்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. இப்பொட்டிகளுக்கு மிகிர விக்ரமராச்சியின் கொன்டா நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நடைபெற்ற அணிகளில் பாகிஸ்தான் நாட்டின் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமட், ஓமான் நாட்டின் தூதுவர் நஸார் அல்-பக்கி, ஈராக் நாட்டின் தூதுவர் குத்பு சுபுகான் அஹமட், தாய்லாந்து நாட்டின் தூதுவர் சூலமணி திருச்சுவான், கணடா நாட்டின் தூதுவர் டேவிட் செக்ரேஸ், கொரிய நாட்டின் தூதுவர் லீ கென் மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் பங்குபற்றியிருந்தனர்.

ஏ.எஸ்.எம்.ஜாவித்

Wed, 11/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை