நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் "ஜனநாயகத்தின் பண்டிகை"

இந்திய தூதுவர் புகழாராம்

இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் “ஜனநாயகத்தின் பண்டிகை" என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித்சிங் சந்து தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு என்பது ஒருவரின் சொந்த எல்லைகளை பாதுகாப்பதை கடந்ததாகும். பிராந்தியமும் உலகமும் கொந்தளிப்பில் இருந்தால், நாங்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது. ஜிஹாத் சித்தாந்தத்தை நிலைநிறுத்தும் சக்திகளை வளைகுடாவிலிருந்து ஒழிப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் நினைவுதினம் நேற்று முன்தினம் கொழும்பு பண்டாரநாயக்க

 

சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கூறுகையில்,

இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலை ஜனநாயக கொண்டாட்டமாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை முதலில் சந்தித்த வெளிநாட்டு பிரமுகராக ஜெய்சங்கர் பதிவாகியுள்ளார். ஜனாதிபதி இவ் வார இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி தனது முதலாவது விஜயத்துக்காக இந்தியாவை தெரிவு செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுத் தலைவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியாவார். இந்த சகல உயர்மட்ட உறவுகள் விஜயங்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மிகவும் நெருக்கமான பிணைப்பை சுட்டிக்காட்டுகின்றன. பிராந்தியமோ அல்லது உலகமோ குழப்பத்தில் இருக்கும் நிலையில் நாம் பாதுகாப்பாக இருக்க முடியாது. ஆகவே தேசிய பாதுகாப்பு என்பது தமது சொந்த எல்லைகளை பௌதீக ரீதியாக பாதுகாப்பதற்கு அப்பாற்பட்டது என்றார்.

 

Thu, 11/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை