பிரிவினைவாதிகளுடன் யெமன் அரசு அதிகார பகிர்வு ஒப்பந்தம்

யெமனில் சர்வதேச அங்கீகரம் பெற்ற அரசு மற்றும் தெற்கின் பிரிவினைவாதிகளுக்கு இடையில் அதிகாரப் பகிர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த இரு தரப்பும் தமக்குள் சண்டையிடுவதை தவிர்க்கவே உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு தொடக்கம் யெமன் ஹூத்திக் கிளர்ச்சியாளர்களுடனான போரில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணியுடன் இந்த இரு தரப்பும் இணைந்துள்ளன. எனினும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆதரவு அளிக்கும் பிரிவினைவாதிகள் கடந்த ஓக்ஸ்டில் சவூதி அரேபியா ஆதரவு கொண்ட யெமன் அரச படை மீது தாக்குதல் நடத்தியது.

யெமன் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர இந்த உடன்படிக்கை முக்கியமானது என்று ஐ.நா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பிரிவினைவாதிகள் தெற்கு யெமனில் சுதந்திரத்தை கோரி போராடுகின்றன. இந்த பகுதி 1990 ஆம் ஆண்டு யெமன் ஒன்றிணைக்கப்படும் முன் தனி நாடாக இருந்த பகுதியாகும். எனினும் அதென் நகரை ஹூத்தி ஷியா கிளர்ச்சியாளர்கள் கைப்பற்ற முயன்ற நிலையில் இந்தப் பிரிவினைவாதிகள் ஜனாதிபதி அப்ரப்பு மன்சூர் ஹதி அரசுடன் கூட்டணி சேர்ந்தனர்.

இந்நிலையில் எட்டப்பட்டிருக்கும் உடன்படிக்கையின்படி பிரிவினைவாதிகளுக்கு சம இடம் வழங்கப்படும் வகையில் அரசாங்கப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

Thu, 11/07/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக