வேலை நாட்களை நான்காக குறைக்கும் மைக்ரோசொப்ட்

ஜப்பான் மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது வேலைநாட்களை நான்கு நாட்களாக குறைத்ததன் மூலம் உற்பத்தியை அதிகரித்துள்ளது.

சுகாதாரமான தொழிற்சூழல் ஒன்றை ஏற்படுத்து சோதனை முயற்சியாக பணிக்காலத்தை சுருக்கும் இந்தத் திட்டத்தால் உற்பத்தி கிட்டத்தட்ட 40 வீதம் அதிகரித்திருப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பிரபல மைக்ரோசொப்ட் நிறுவனம், ஜப்பானில் இயங்கும் தனது அலுவலகங்களில் வழக்கமான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமல்லாமல், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளித்து கடந்த ஓகஸ்ட் மாதம் அறிவித்தது.

அந்த நாளில், தனது 2,300 பணியாளார்களுக்கும் அந்நிறுவனம் சிறப்பு விடுப்பு அளித்தது. அதன் பலனாக, அந்த மாதத்தில் ஒவ்வொரு பணியாளருக்குமான நிறுவனத்தின் விற்பனை 40 வீதம் அதிகரித்தது. மேலும், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே அலுவலகங்கள் செயல்பட்டதால் நிறுவனத்தின் செலவும் கணிசமாகக் குறைந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகிலேயே அதிக நேரம் வேலை செய்யும் நாடுகளில் ஜப்பான் ஒன்றாகும்.

Thu, 11/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை