வெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிர்க் கட்சியின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் தீர்மானம் மிக்க வெற்றியை பெற்றுள்ளார். இந்த வெற்றியை அமைதியாகவும் எவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாத வகையிலும் கொண்டாடுமாறு எமது கட்சி ஆதரவாளர்கள் அனைவரையும் தான் கேட்டுக்கொள்வதாக எதிர்க் கட்சித் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கடந்த ஐந்து வருட காலமாக இந்த அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் உபத்திரவம் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை பெற்றுத் தரும் திட்டமொன்றை நாம் ஆரம்பிக்கவுள்ளோம். குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கூடாக பேரினவாத நோக்கத்துடன் கூடிய பல்வேறு இன மத அமைப்புகள் மூலம் மக்கள் ஆணைக்கு புறம்பாக 2015 இல் நடந்ததைப் போல பின்கதவால் மேற்கொள்ளும் முயற்சிகளை இம்முறை தோற்கடித்த மக்களுக்கு தான் வாழ்த்துக் கூறுகிறேன். இவ்வாறு அரசியல் தேவைகளுக்காக மதம் மற்றும் இனவாதத்தை ஊக்குவிக்கும் இந்த அபாயகரமான விளையாட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது.

முன்னைய அனைத்து ஜனாதிபதி தேர்தல்களைப் போலன்றி இம்முறை நடந்த ஜனாதிபதி தேர்தல் வித்தியாசமானது. 19 ஆம் திருத்த சட்டத்தினால் கொண்டுவரப்பட்ட ஆளுமை முறைமை தொடர்பான சிக்கல்களே இதற்கு காரணமாகும்.

புதிய ஜனாதிபதிசத்தியப் பிரமாணம் செய்த பின்னர் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்த சட்டத்தின் ஏற்பாடுகள் பற்றி நாம் ஆராய்வோம். அதற்கு ஏற்றவாறு எமது செயற்பாட்டு திட்டத்தை உடனடியாக ஆராய்ந்து பார்ப்போம். ஐந்து வருட காலம் துடுப்பின்றி நீரில் தத்தளித்த இந்த நாட்டை எந்த திசையில் இட்டுச் செல்வது என்பதை தீர்மானிக்கும் வாய்ப்பு எமக்கு கிடைத்திருக்கிறது. அடிமட்டத்தில் இருந்த நாட்டின் பொருளாதாரத்த கட்டியெழுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அத்துடன இந்த குறிக்கோளை எட்டுவதற்கு அரசியலமைப்பு ரீதியிலும் சட்டத் திருத்த ரீதியிலும் மாற்றங்களை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது.

இது தொடர்பான மேலதிக அபிவிருத்திகள் தொடர்பாக நாம் எடுத்த தினங்களில் அறியத் தருவோம். அவ்வாறான சூழலில் அரசாங்கம் பாராளுமன்ற பாரம்பரியங்களை கடைப்பிடிக்கும் என்று நாம் நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Mon, 11/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை