நேகம நிவ்- ஸ்டார் அணி சம்பியனாக தெரிவு

கெகிராவ பிரதேசத்தில் இவ்வருடத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட நான்கு அணிகளுக்கிடையிலான சினேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்றினை நேகம நிவ்- ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 03 ஆம் திகதி நேகம முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

இக்கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இவ்வருடம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த நேகம நிவ் - ஸ்டார் அணி, கட்டுக்கெலியாவ அல் - அக்ஸா அணி, விஜிதபுர, கலாவெவ ஆகிய அணிகள் கலந்து கொண்டன இதில் இறுதிப் போட்டியில் நேகம நிவ் - ஸ்டார் அணியும், விஜிதபுர அணியும் போட்டியிட தகுதி பெற்று நேகம நிவ்- ஸ்டார் அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தையும் ரூபா 25000 பணப்பரிசினையும் பெற்றுக் கொண்டனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய விஜிதபுர அணியினர் 5 ஓவர்களில் 29 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர்.மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அகீல 18 ஓட்டங்களைப் பெற்றார்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேகம நிவ்-ஸ்டார் அணியினர் 4.1 ஓவர்களில் 32 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றனர்.இதில் அமீன் 10 ஓட்டங்கள்,சுகது 9 ஓட்டங்கள்,சல்மான் ஆட்டமிழக்காது 8 ஓட்டங்கள் பெற்றனர்.

இத்தொடரில் தொடர் ஆட்ட நாயகனாக நேகம நிவ் ஸ்டார் அணியின் சல்மான், சிறந்த பந்து வீச்சாளராக நேகம நிவ் ஸ்டார் அணியின் சப்ரான், சிறந்த துடுப்பாட்ட வீரராக விஜிதபுர அணியின் அரூஸ் ,சிறந்த பந்து தடுப்பாளராக விஜிதபுர அணியின் நஸ்ஹான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.இவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டது.

( கல்நேவ தினகரன் விசேட நிருபர் )

Thu, 11/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை