இலங்கை நீச்சல் அணிக்கு விசேட பயிற்சி!

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை நீச்சல் அணிக்கு விசேட பயிற்சி வழங்கப்படவுள்ளது.

தியதலாவையில் இவ்வாறு விசேட பயிற்சி வழங்கப்படவுள்ளது. இம்முறை தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் நீச்சல் போட்டியில் 21 பேர் அடங்கிய அணி பங்கேற்கவுள்ளது. இதில் பத்து வீராங்கனைகள் உள்ளடங்குகின்றனர். இந்த நீச்சல் அணி எதிர்வரும் முதலாம் திகதி நேபாளத்திற்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது. எதிர்வரும் 5ஆம் திகதி நீச்சல் போட்டி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 11/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை