மெக்சிகோவில் தாக்குதல்: ஒரே குடும்பத்தின் ஐவர் பலி

வடக்கு மெக்சிகோவில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதல் ஒன்றில் இரு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரும் அமெரிக்க பிரஜைகளாவர்.

சம்பவ இடத்தில் கார் ஒன்று பற்றி எரிந்திருப்பதோடு சிலர் உயிரோடு எரிக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் பலர் காணாமல் போயிருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. தவறாக அடையாளம் காணப்பட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தப் பகுதியில் இயங்கும் போதைக் கடத்தல் கும்பல் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Wed, 11/06/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக