சிறுநீரக மாற்றுச் சிகிச்சையில் பெயரால் குழப்பம்: முன்னுரிமையில் கடைசியானவருக்கு சிகிச்சை

அமெரிக்காவின் நியூஜெர்சியில் சிறுநீரக நோயாளிகளில் முன்னுரிமை பட்டியலில் கடைசியில் இடம்பெற்ற பயனாளிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்காக பிரபல மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.

இரண்டு நோயாளிகளுக்கும் ஒரே வயது, பெயர் என்பதால் ஏற்பட்ட குழப்பத்தில் இந்த தவறு நிகழ்ந்துவிட்டதாக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

நியூஜெர்சி மாகாணத்தில் உள்ளது வர்சுவா அவர் லேடி ஒப் லுௗர்த்ஸ் மருத்துவமனையில் கடந்த 18ஆம் திகதி 51 வயது நோயாளி ஒருவருக்கு சிறுநீரக தானம் மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிவு செய்து வைத்திருந்தவர்களின் பட்டியலில் முன்னுரிமையின் அடிப்படையில் வேறு ஒரு நபருக்கே அந்த சிறுநீரகம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை சிகிச்சைக்குப் பின்னரே மருத்துவமனை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்

இது குறித்து விளக்கமளித்த மருத்துவமனையின் துணைத் தலைவர் ரெஜினோல்ட், “எங்கள் மருத்துவமனையின் 40 ஆண்டுகால சேவையில் இப்படி ஒரு குழப்பம் நிகழ்ந்ததில்லை. பாதுகாப்புக்கும் நிர்வாகத்திற்கும் பெயர் போன எங்களின் மருத்துவமனையில் நடந்த இந்தத் தவறுக்கு வருந்துகிறோம். இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வோம்.

நோயாளிகள் தங்களின் உயிர் பாதுகாப்பை எங்களின் கைகளில் ஒப்படைக்கின்றனர். அவர்களுக்கு நாங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். இதுபோன்ற தவறுகள் அரிது. பெயரும், வயதும் ஒன்றாக இருந்தபோதே கூடுதல் அடையாள அம்சங்களை நாங்கள் இணைத்திருக்க வேண்டும்.

எங்கள் மருத்துவமனையின் இயக்குநர் சிறுநீரகத்தை பெறத் தவறிய நோயாளியை நேரில் சந்தித்து மன்னிப்புக் கோரினார்.

தற்போது இரண்டு நோயாளிகளுமே உடல் நிலை தேறி வருகின்றனர்” என்றார்.

சிறுநீரகத்தை முன்னுரிமையின் அடிப்படையில் பெற்றிருக்க வேண்டிய நோயாளிக்கு கடந்த 24ஆம் திகதி மாற்று சிறுநீரகம் பொறுத்தப்பட்டது.

Fri, 11/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை