அக்கரைப்பற்று ஏ.சீ.சீ கழகம் சம்பியன்

அட்டாளைச்சேனை பைனா விளையாட்டுக் கழகத்தின் 18ஆவது வருட நிறைவினை முன்னிட்டு நடைபெற்ற மின்னொளி கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று ஏ.சீ.சீ.கழகம் சம்பியனாகியது. அணிக்கு 8 பேர் 5 ஓவர் கொண்ட இச்சுற்றுப்போட்டியில் அம்பாறை

மாவட்டத்திலுள்ள 60 முன்னணிக்கழகங்கள் பங்கு கொண்டன.இதன் இறுதிப்போட்டி அட்டாளைச்சேனை அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த (31.10.2019) கழகத்தின் அமைப்பாளர் ஆசிரியர் ஏ.எஸ்.சபீலுார் ரசாத் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொதுநிர்வாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஒருங்கிணைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.முகம்மட் நஸீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் அக்கரைப்பற்று சிமாட் சிட்டி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எம்.ஹம்துான்,பொறியியலாளர் இசட்.பாதீக் அஹமட்,பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைஸ்,விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத்,கழகத்தின் செயலாளர் ஏ.எம்.சஜித்,பொருளாளர், ஏ.ஜீ.பரீட்,முகாமையாளர் ஏ.எஸ்.றுக்சான் உட்பட கழகத்தின் நிர்வாக உறுப்பினர்கள்,முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் பரிசுப் பொதிகளையும் வழங்கி வைத்தனர். இறுதிப்போட்டியில் நாணயச்சூழற்சியில் வெற்றி பெற்ற ஏ.சீ.சீ.அணியினர்

முதலில் பள்ளிக்குடியிருப்பு றஹிமியா கழக அணியினரை துடுப்பெடுத்தாடும் படி கேட்டுக் கொண்டதற்கமைவாக குறிப்பிட்ட 5ஓவர் நிறைவில் 3 விக்கட் இழப்பிற்கு 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.பதிலுக்கு வெற்றி பெற துடுப்பெடுத்தாடிய ஏ.சீ.சீ.அணியினர் 4.2 ஓவர் நிறைவில் 2 விக்கட் இழப்பிற்கு 67 ஓட்டங்களைப் பெற்று இப்போட்டியில் 6 விக்கட்களினால் வெற்றி பெற்றுக் கொண்டனர்.

இறுதிப்போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரராக ஏ.சீ.சீ.அணியின் அஸ்லமும்,இச்சுற்றுப்போட்டித் தொடரின் தொடர்நாயகன் விருது றஹ்மியா கழகத்தின் மசூதும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)

Sat, 11/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை