ஜூலியன் அசாஞ்ச்சின் கற்பழிப்பு குற்றச்சாட்டை கைவிட்டது சுவீடன்

விக்கிலீக்ஸ் இணை நிறுவனரான ஜூலியன் அசாஞ்ச்சுக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு சுமத்தப்பட்ட கற்பழிப்புக் குற்றச்சாட்டு மீதான விசாரணையை சுவீடன் கைவிட்டுள்ளது.

இந்தக் குச்சாட்டை மறுத்து வந்த அசாஞ்ச் ஸ்வீடனுக்கு நாடுகடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக கடந்த 2012 தொடக்கம் லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதரகத்தில் ஏழு ஆண்டுகள் தஞ்சமடைந்திருந்தார். தூதரகத்தில் இருந்து கடந்த ஏப்ரலில் வெளியேற்றப்பட்ட அசாஞ்ச் தனது பிணை நிபந்தனையை மீறியதற்காக 50 வாரங்கள் சிறைத் தண்டனைக்கு முகம்கொடுத்துள்ளார்.

அவர் தற்போது லண்டனில் பெல்மார்ஸ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அசாஞ்ச் மீதான சுவீடனின் விசாரணை 2017ஆம் ஆண்டு கைவிடப்பட்டபோதும் அவர் தூதரகத்தில் இருந்து வெளி யேற்றப்பட்ட பின் இந்த ஆண்டு ஆரம்பத்தில் அது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

மறுபுறம் 2010 இல் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மூலம் இராணுவ மற்றும் இராஜதந்திர ரகசியங்களை அம்பலப்படுத்தியது தொடர்பில் பிரிட்டனில் இருந்து அசாஞ்சை நாடுகடத்துவதற்கு அமெரிக்கா கோரியுள்ளது.

2010 இல் ஸ்டொக்ஹோமில் இடம்பெற்ற விக்கிலீக்ஸ் மாநாட்டில் பங்கேற்க அங்கு சென்றபோது அசாஞ்ச் பெண் ஒருவரை கற்பழித்ததாகவும் மற்றொருவர் மீது துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

Thu, 11/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை